Wednesday 30 March 2011

விமரிசனம்

விமரிசனம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு சிந்தனை.

சமீபத்தில் இன்னிசைக் கச்சேரி ஒன்றிற்குச் சென்றிருந்தேன். பாடகற்கு நல்ல இனிமையான குரல். "சலமு" வர்ணத்தில் ஆரம்பித்துப் பின்னர்  "கௌள" ராகம்(ஸ்ரீ மஹா கணபதி ரவதுமாம்) பாடி சுரமும் பாடினார். முக்கியமான ராகமாக லதாங்கி பாடினார். அடுத்து ராகம் தானம் பல்லவி. மிக நீண்ட கடினமான ஒரு தானம் பல்லவி. முடிக்க மிக நீண்ட நேரம். நடுவில் சின்னச் சின்ன பாடல்கள் வேறு இல்லை. நடுநடுவே சிறு சிறு தவறுகள் இருந்தாலும் பாடகர் மிக நன்றாகவே பாடினார். இருந்தாலும் கச்சேரி மிக மிக நன்றாக இருந்தது என்று சொல்ல முடியாத நிலை.

பாடகரிடம் இதையெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டே "கச்சேரி நன்றாக இருந்தது ஆனால்" என்றி கூறிய நேரம் அவர் கவனத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். இதனால் தயங்கிய நான் விமரிசனம் செய்வது எப்படி என்ற சிந்தனையில் ஆழ்ந்தேன்.

மேலை நாடுகளில் ஒரு வழக்கம்.சிறு வயதிலிருந்து குழந்தைகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டாமல் அவர்களின் முயற்சியைப் பாராட்டி அவர்களை உற்சாகப் படுத்த வேண்டும் என்பது அவர்கள் கொள்கை. ஒரு வழியில் பார்த்தால் குழந்தைகள் மனச்சோர்வடையாமல் தங்களை வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் இம்முறையினால் குழந்தைகட்கு மிகவும் தன்னம்பிக்கை அதிகமாகி தவறுகளை ஒத்துக் கொண்டு அதனை திருத்திச் செம்மையுற முடியாமல் போகிறது.
இதனால் தவறுகளைச் சுட்டிக் காட்டும் பொழுது அதை உணர்ந்து திருத்திக் கொள்ளும் மனப்பான்மையை வளர்க்க வேண்டியது அவசியமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இதையெல்லாம் சொல்கிறேனே ஒழிய அந்த மனப்பக்குவம் எனக்கும் இருக்கிறதா என்பது சந்தேகம்தான். சில நாட்களில் சமையலில் உப்போ புளியோ கூடியதை மற்றவர்கள் சொல்லும் பொழுது ஒப்புக்கொள்ள மனம் வருவதில்லைதான்! அதுவும் ஒரு விமரிசனம் தானே!

ஆனால் "கன்சற்றக்டிவ் க்ரிடிசிசம்" என்பது ஒன்று. ஒருவர் ஒன்றை மிக நன்றாகச் செய்கிறார் என்று உணர்ந்து, அதிலிருக்கக் கூடிய சிறு தவறை நிவர்த்தி செய்வதன் மூலம் அச்செயல் மேம்படும் என்று நினைத்துச் சுட்டிக் காட்டினால்  அவ்விமரிசனத்தை செவிமடுப்பது நன்றுறே நினைக்கிறேன்

1 comment:

Shakthiprabha (Prabha Sridhar) said...

விமர்சனத்தை ஆக்கத்துக்கு துணையாக ஏற்று நடப்பது கலைஞர்களின் இயல்பு. என்னைப் பொருத்தவரை, கடினமான விமர்சனங்களை ஏற்க இரண்டே இரண்டு முக்கியம்.

1. விமர்சிப்பவர் கலைஞரின் மதிப்பில் உயர்ந்தவராய் இருத்தல் அவசியம், அல்லது விமர்சித்த கலையில் கலைஞரை விட திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும்.

2. விமர்சனத்தை பொதுவில் பலர் முன்னிலையில் வைப்பதை கலைஞர்கள் விரும்புவதில்லை

(இங்கு கலைஞர்கள் என்பது தினம் சமைக்கும் இல்லத்தரசி முதல் நடனம், பாடல் திறமைகளில் பளிச்சிடும் ஏனையர் வரை அனைவரும் அடக்கம்)

Post a Comment