Friday 18 March 2011

காலையில் ஒரு காட்சி.

மிக இனிய காலை நேரம். அடுப்பிற்குப் பக்கத்தில் பெரிய ஜன்னல். அதன் வழியே வரும் பொன்னான காலை இளங்கதிர்கள். காதில் இன்னிசையாகக் கேட்கும் பறவைகளின் கரையல். ஃபில்டரில் போட்ட காஃபியின் மணம்.இதையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்த நான் கற்பனை உலகிற்குத் தாவினேன். 'அவன் அருகே வந்துமெல்ல அணைத்தபடி மௌனமாக என்னைப் போல் ரசித்தவண்ணம் இருந்தான்.

இதை அப்படியே கவிதையாக எழுதினால் என்ன? என்று அவன் கேட்க, உடனே இருவரும் கவிதை எழுதத் துவங்கினோம்.

"காலை ஒளிக் கதிர்தான் பாய்ந்த்தென்னே
---------------------------------------------" '

"விசாலி ஏ விசாலி உன்னைத்தானே, கூப்பிடறது காதுல விழலையா? ஏன் மரம் மாதிரி நிக்கற" என்ற கணவரின் குரல் காதின் உள்ளே கடூரமாக ஒலிக்க கற்பனை கலைந்த நான் வாழ்க்கை வேறு, கற்பனை உலகம் வேறு என்று நினைத்துப் பெருமூச்சு விட்டவாறு 'என்ன?' என்று கேட்டேன். வாழ்க்கை சில சமயங்களில் இப்படித்தான் ஓடுகிறது.

1 comment:

Shakthiprabha (Prabha Sridhar) said...

:)

மனம் ஏனோ நெருடுகிறது...
ப்ளாகர் வலையுலகிற்கு உங்களை வரவேற்கிறேன்.

Post a Comment