Friday 18 March 2011

இது என்ன கொடுமை!!

சமீபத்தில் என்னுடைய பெண் "வாட்டர்" என்கிற திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் கடைசி சில காட்சிகளைப் பார்த்தேன். அதிலிருந்தே கதையின் கருத்தை ஊகிக்க முடிந்த்து.

இந்து சமவெளி நாகரிகத்தை உலகிற்குக் கொடுத்த் இந்தியா, வேதங்களுக்குப் பிறப்பிடமான இந்தியா, அர்த்தநாரீஸ்வரரை , ஆணும், பெண்ணும் சேர்ந்த உருவினை தெய்வமாக வழிபடும் இந்தியா, மனிதனையும், மிருகத்தையும் ஒருங்கிணைத்து பிள்ளையாராகவும், அனுமானாகவும் வழிபட்டு நாகரீகத்தில் மேம்பட்டிருக்கும் இந்தியா,
சமஸ்க்ருத பஷையிலிருக்கும் ஓராயிரம் விஷயங்களைப் படித்து அதனையொட்டி தங்கள் ஆராய்ச்சிகளை மேம்படுத்த வெளிநாட்டினரை அனுமதித்த இந்தியா, இப்படி ஒரு கேவலமாக விதவைகளை நடத்தி வரலாற்றில் ஒரு இருட்டடிப்பான இடத்தைப் பிடித்தது எப்படி?

ஏழு வயதுப் பெண் ஒரு விதவையா? கல்யாணம் செய்து கொள்வதன் தாத்பரியம் என்ன? தாம்பத்யம் மூலம் உலகத்தில்
உயிரினத்தைத் தழைக்கச் செய்வது. ஏழு வயதில் அதை அவள் அனுபவிக்காத போது, விதவை என்று அவளைக் கொடுமைப் படுத்தும் உரிமையை ஆண்கள் எங்ஙனம் எடுத்துக் கொண்டனர்?அந்தக் கலியாணத்திற்கு ஏது மதிப்பு?

உச்சக்கட்டக் கொடுமை என்ன என்றால் இம்மாதிரியான சம்பவங்கள் இன்றும் நடப்பது அதனை நடக்க விடுவது!!

1 comment:

Shakthiprabha (Prabha Sridhar) said...

கூறிய வேதங்களும் சமஸ்க்ருதங்களும், இறைவனும் தொன்று தொட்டு விளங்குபவை. ஊடே வந்த சில தேவையற்ற சாஸ்திரங்கள் திணிக்கப்பட்டவை. அது தான் வேறுபாடு.

Post a Comment