Wednesday 23 March 2011

இதழ் பதினொன்று

வட்டமான தட்டு
வானத்திலே மிதந்து
வண்ண ஒளி தன்னை
வாரி வழங்கும் தட்டு
பூமியென்னும் கோளருகே
சுழன்று வரும் தட்டு
சூரியனின் ஒளி பெற்றே
நமக்குதவும் தட்டு
நல்ல நல்ல தட்டு அது
வண்ண நிலா தட்டு.

-பாப்பா பாட்டோ!


விரிந்த மலர் பன்னிரண்டு

தேவீ! பரசக்தி! மீனாட்சி! உமையவளே!
குவளைக் கண் திறந்தென்னைப் பார்த்திட்டால்
கவலையெல்லாம் தீர்ந்து நான் களித்திருக்க மாட்டேனோ!
கருணை மிகு காமாட்சி உன்
அருள் சுரக்கும் பார்வை பட்டால்
அருவியெனப் பொழியுமென் அழுகையுந்தான் தீராதோ!
கோலமிகு குமரியம்மன், தாயே!
நீ குளிர்கண்ணால் நோக்கியென்னை ஏறெடுத்தால்
ஏங்கித் தவிக்குமென் வேதனையும் கலையதோ!
சீலமிகு சங்கரியே!
கருணை மிகு கடைக்கண்ணால்
என்னாளும் காத்திடுவாய், தாயே பராசக்தி!

-தெய்வத்தை நாடி

2 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் . சந்தங்கள் ரசிக்க முடிகிறது.

Ramagopal said...

Mikka NanRi

Post a Comment