Saturday 19 March 2011

ஒன்பதாம் மடல்

எத்தனையோ பாட்டெழுதி இத்தனை நாள் போக்கிவிட்டேன்.
இன்னுமென்ன வேண்டுகின்றாய்?
கொடும் பார்வை தனை வீசி
அனலாகக் கக்குகின்றாய்.
ஆயினும் நான் அரவணைத்து
அடிதாங்கி நிற்கின்றேன்.
கோபத்தை நீ தணித்துக்
குளிர் புனலாக வாராயோ?

-அம்பா நீ இரங்காயெனில்

வார்ப்பு பத்து

கூட்டினுள் நத்தை போல் கிடந்த என்னை நீயே
காட்டினுள் சிங்கமென்று ஏற்றி வைத்தாய்.
இது என்ன விந்தை என்று வியந்து நின்றேன்.
நீயோ மமதையாய் சிரித்து நிற்கின்றாய்
நத்தை கூடும் உனக்குப் பெரிதென்று -குறுகிய
வட்டத்தில் என்னை விலங்கிட்டு விட்டாய்
நாளை எந்த உருவில் வார்ப்பாய் என்று
நானும் எண்ணிச் சிரிக்கின்றேன்!
உருவாக்குதல் கடினமென்ற உண்மையறிந்து
நாளும் வாளாவிருக்கின்றேன்.

-ஒருவரை ஒருவர் உருவாக்குதல் உலகினில் உண்டன்றோ!!

No comments:

Post a Comment