Sunday 28 August 2011

மதம்

எம்மதமும் சம்மதம் என்று
செப்பினான் அன்றோர் புலவன்;
ஆயின் இன்று கண்டதோ
மதத்தால் பிரிவினை
எனும் பெரும்பிளவு;
கடவுளின் சன்னிதானத்தில்
எல்லோரும் சமம் என்று
இயம்பினார் ஒரு பிரிவினர்;
ஆயின் இவ்வுலகு கண்டதோ
 ஹிம்சை எனும் அரக்கன்;
புலியும் பூனையும் ஒருங்கிணைந்து
எடுக்கிறோம் புகைப்படம்;
அவர்க்கிருக்கும் அறிவினைக்
கொடுப்பாயா எமக்கும்
எந்தன் இறைவனே!

3 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல தேடல்!!!!!

முனைவர் இரா.குணசீலன் said...

மதிப்பதால் மதமானது

ஒருவர் மதத்தை இன்னொருவர்
மதிக்காவிட்டால் அது எப்படி மதமாகும்??

Ramagopal said...

nangu sonneergal. NanRi

Post a Comment