Friday 14 October 2011

பற்றி நின்றால் பற்றகற்றும்

ஆக்க ஒரு கடவுள் உண்டு; அதுவே ப்ரும்மா;
அழிக்க ஒரு கடவுள் உண்டு; அதுவே சிவமாகும்;
காக்க ஒரு கடவுள் உண்டு; விஷ்ணு எனும் நாமம்;
கல்வியுமளிக்க கலை தேவியாம் சரஸ்வதி;
செல்வமுமளிக்க செந்தாமரையில் லட்சுமி;
அனைத்தையும் காக்கும் அருள் பொழியும் அம்பிகை;
மழை வேண்டி மாரியம்மன்;
குலம் சிறக்கக் காளியம்மன்;
மனமிரங்க துர்கையம்மன்;
ஆக எதற்குமொரு பற்றுண்டு;
பற்றி நின்றால் வெற்றியுண்டு;
வெற்றி கண்டால் கலக்கமில்லை;
கலங்கி நின்றால் இரக்கமில்லை;
இரங்கி நின்றால் ஏற்றமில்லை;
ஏற்றமிருப்பின் தெளிவு இல்லை;
தெளிவு கண்டால் பற்றில்லை;
பற்று இன்றேல் ஞானமுண்டு;
ஞானம் கண்டால் உயர்வு உண்டு;
இதுவே வாழ்வின் பல நிலைகள்.

No comments:

Post a Comment