Monday 15 October 2012

தாயின் மயக்கம்!



கருவினில் வளர்கையில் நான் கண்டேன் பல தொல்லை,
பிறந்தபின் நீ தந்தாய் சிரிப்பெனும் ஓர் முல்லை;
பல மாதம் கழிந்தபின் நீ நகர்ந்தாய் வட்டமிட,
பார்த்து நான் களித்தேன் அது நெஞ்சைத் தொட்டுவிட;
அடுத்து நின்றாய் நடந்தாய் ஓடினாய்,
நானும் ஆடினேன் உன்னுடன் ஓடினேன்;
நாட்கள் நகர பிதற்றினாய்ப் பேச்சென்று,
வியப்பினால் விக்கித்தேன் இதையும் மெச்சவோவென்று;
இருபினும் இருக்கிறது நாள் முழுதும் உன் வேலை,
ஆயினும் இழுக்கிறது குறும்பெனும் உன் லீலை;
நீயும் வளர்ந்தாய் எண்ணிலா சிறப்புடன்,
நானும் நினைத்தேன் சற்றே மயக்கமுடன்;
நானென்று காண்பேன் நீ வளர்ந்த படிகளை,
இன்னொன்று ஈன்றால் தந்திடுமோ செல்ல அடிகளை;
நினைவு கூர்ந்தேன் நான் கண்ட பல தொல்லை,
இல்லை வென்றிடுமோ சிரிப்பெனும் முல்லை!

உலகில் மக்கட் தொகை பெருக இதுதானோ காரணம்?

No comments:

Post a Comment