Tuesday 17 January 2012

நம் நாடும் சுத்தமும்


‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’
‘சுத்தமே சோறு போடும்’ என்றெல்லாம் பழமொழி உண்டு. ஆனால் நாம் எந்த அளவிற்க்கு அதை செயலாற்றுகிறோம்? வீட்டில் இருக்கும் குப்பையைத் தெருவில் கொட்டுகிறோம் தெருக்களில் வீடில்லாத சிறுஇடம் கிடைத்தாலும் அங்கு குப்பை சிறு மலையாகக் காட்சியளிக்கிறது. சர்க்கார், வீடுகளில் எடுக்கும் குப்பையைக் கொண்டு போய் வீடுகளுக்கு அருகில் பெரிய காலியான இடங்களில் சேர்க்கிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் சொல்லி முடியாது.

சர்க்கார் இதற்காக் ஒருமுயற்சியும் செய்வதில்லை. ஆனால் மக்கள் ஏன் முயற்சி எடுக்கக் கூடாது?
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்” அல்லவா?
சர்க்கார் நமக்கு நன்மை செய்யாமல் இருந்தாலும் மக்கள் இப்பணிகளைத் தாங்களே செய்து அதற்குப் படிப்பினைக் காட்டவேண்டாமா? நாம் நம் வீடுவரையில் , தெருவரையில் சுத்தமாக வைத்துக்கொள்ள முயற்சிக்கலாமே. பலகோடி லாபங்களை அடையும் நிறுவனங்கள் சிறுவர், சிறுமியர், மற்றும் பெரியவர்க்கும் க்ளொவ்ஸ், பூட்ஸ், உடுப்பு, கறுப்புக் கண்ணாடி, மாஸ்க் போன்றவற்றை இலவசமாக வாங்கிக் கொடுத்து மாதமொருமுறை எல்லோரையும் க்ளீனிங்க் காம்பெய்னில் ஈடுபடுத்தலாமே? தெரு மற்றும் பொது இடங்கள், கடற்கரை என்று எல்லா இடங்களும் விரைவில் சுத்தமாகும்.
http://www.bbc.co.uk/news/world-asia-15769402 இந்த லிங்கில் உள்ள “அக்லி இந்தியன்ஸ்” எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று.

“கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” ஐயமில்லை. நம் நாட்டவர் மேலை நாடுகளில் வேலைவாய்ப்பு அதிகம் பெறுகின்றனர். ஆனால் எந்த அளவிற்கு மேலை நாட்டினர் நம்மை மதிக்கின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை மதிக்கப் படிப்பு மட்டும் போதாது . சுத்தமும் வேண்டும். மேலை நாடுகளில் இருக்கும் நாமே அவர்களுக்கு இணையாக சுத்தமாக இருக்கிறோமா என்று சொல்லமுடியாது. இதைப் பற்றிக் கூறுகையில் கழிவறையைப் பற்றிக் கூறியே ஆக வேண்டும்.


நம் நாட்டில் பொது இடங்களில் கழிவறை வசதிகள் மிகக் குறைவு. இருக்கும் கழிவறைகளும் அசுத்தத்திற்குப் பெயர் போனவை. ஏன் அவ்வளவு தண்ணீர்? புரியவில்லை. நீரினால் நம்மை சுத்தப் படுத்தும் அதே நேரம் கிருமிகளைப் பரப்பவும் , கொசுக்களை உற்பத்தி செய்யவும் அதே தண்ணீர் உதவுகிறது என்று தெரியாதா? இதனால் பரவும் வியாதிகள் பலப் பல. ஒருமுறை காசுகொடுத்து செல்லும் கழிவறை ஒன்றிற்குச் சென்றேன். கால் பதிக்க முடியவில்லை. ஏன் இந்த நிலை என்று பணியாளரைக் கேட்ட பொழுது அவரின் பதில் என்னைக் குன்ற வைத்தது. ஆக சுத்தமாக வைக்க வேண்டும் என்பது ஒருவர் மனதிலும் இல்லை. தொலைக்காட்சிகளில் எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் போட்டுக் காட்டவேண்டும், எல்லோரும் நலமுடன் வாழ மக்கள் இவைகளை அறிந்திருப்பது மிக அவசியம்.

மேலும் பொதுக் கழிவறைகளிலும் , வீடுகளிலும் , இரயில்களிலும் டாய்லெட் சீட்டின் மீது தண்ணீர் தேங்கியிருக்கும் நிலையில் எங்ஙனம் அமருவது? இதற்குக் காரணம் ஒன்று நம்மை சுத்தி செய்ய பயன் படும் தண்ணீர்க் குழாய் சரியான வால்வுடன் இருக்காது. இரண்டு வீடுகளில் டாய்லெட் அருகில் இருக்கும் ஷவருக்கு தடுப்புச் சுவர் கிடையாது. நான் பேசுவது வெஸ்டர்ன் டாய்லெட் பற்றியாகும். இப்போது அனைவரின் செல்வநிலை சற்றே உயர்ந்திருக்கையில் இதையெல்லாம் கவனிக்கலாமே.
டாய்லெட் சீட்டுகள் தரமானதாக இருப்பதில்லை. தண்ணீர் குழாய்கள் துருப்பிடித்திருக்கும். டாய்லெட் பவுல் கறை பிடித்து இருக்கும்.. டாய்லெட் பவுலிற்கு வரும் தண்ணீர் உப்பு நீராக இருக்கையில் கறை நீங்குவது கடினம். அதற்கு உபயோகிக்க திறமான சுத்திகரிப்புகளைக் கண்டு பிடிக்கலாமே? இதையெல்லாம் செய்தால் நம் நாட்டில் டூரிஸம் கூட அதிகரிக்கும் என்பேன் நான்.

இதையெல்லாம் கவனித்தால் இந்தியவைப் பற்றி இன்னும் பெருமையடையலாம்

No comments:

Post a Comment