குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல்
கேளாதவர்.
குழந்தைகள் தம் மழலை சொல்லால் நம்மை ம்கிழ்விக்கும் பொழுது
அதற்கு நிகரான இன்பம் வேறில்லை எனலாம்.
என்னுடைய பேரன் இதற்கு விதி
விலக்கல்ல. இரண்டு வயதிலேயே நன்கு பேசத்துவங்கிவிட்டான். பிற்காலத்தில் சிறந்த
பேச்சாளராக வருவனோ அல்லது பேசி மற்றவர்களைத் தூக்கத்தில் ஆழ்த்துவானோ
தெரியாது. இப்போது எல்லோரையும்
மகிழ்ச்சியில் ஆழ்த்திக்
கொண்டிருக்கிறான்.
இதோ சில கிள்ளை மொழி.
புத்தகங்களைப் பெரிய
மனிதன் போல் வாசித்துக் கொண்டிருந்தவன் திடீரென்று , "அம்மா நீ (நான்) யொம்ப
சந்தோஷமாயிக்கேன்"
என்பான்.
ஒரு நாள் சமயலறையில் தொடவேண்டாம் என்ற
சாமானத்தை தொட்டுவிட்டு எல்லோரும் ஏகக்குரலில் எடுக்க வேண்டாம் என்று
கத்திய
பொழுது சிரித்துக் கொண்டே " நீ யொம்ப குறும்பு பண்றேன்" என்று
கூறினான்.
காரில் எல்லோரும் சென்று கொண்டிருந்தோம். அப்போது நடந்த
உரையாடல்.
" 'தாத்தா கார் எங்கே?'
'தாத்தா கார் ஆக்சிடெண்ட்
ஆயிடுத்து'
'எப்டி தாத்தா கார் அக்சிடெண்ட் ஆயிடுத்து?'
'டாக்சி ஃபாஸ்டா
வந்து இடிச்சுட்டான்'
அடுத்து அவன் கூறியது அனைவரையும் வியப்பில்
ஆழ்த்தியது.
'ஃபாஸ்டா போனா போலீஸ்காரன் புடிசிண்டு
போயிடுவான்'
ரதி, ராஜேஷ், ரிஷப் மூவரும் வெளியில் செல்லக்
கிளம்பினார்கள். திடீரென்று ரிஷப் உள்ளே ஓடி வந்து விட்டான்.
ரதி உள்ளே திரும்பி
வந்து அவனை ஏன் உள்ளே வந்தாய் என்று கேட்க அவனோ 'அதான் ஒரு சிரிப்பு ' என்று கூறி
எல்லோரையும்
சிரிக்க வைத்தான்.
தாத்தாவுக்கும் பேரனுக்கும் ஒரு
விளையாட்டு.
தாத்தா:
க்ரீன் லைட் வந்தா..
பேரன்: போகணும்
தாத்தா: ரெட்
லைட் வந்தா..
பேரன்: ஸ்டாப்
மறுபடிதாத்தா:
க்ரீன் லைட்
வந்தா..
பேரன் குறும்பு சிரிப்புடன்: ஸ்டாப்
தாத்தா: ரெட் லைட்
வந்தா..
பேரன்: போகணும்
திரும்ப அதே கேள்வி , அதே பதில்
பின்னர் தாத்தா:
க்ரீன் வந்தா ஸ்டாப், ரெட் வந்தா கோ
பேரன்: க்ரீன் வ்ந்தா கோ , ரெட் வந்தா
ஸ்டாப்.
ஜோ என்பவர் என் வீட்டுக் க்ளீனர்.
ரதி "வரியா ரிஷப் ஜோ
குளிக்கலாம் " என்றால் 'ஜோ எங்கம்மா?' என்று பேரன் கேட்பான்.
இப்படியாகத்
தினமும் ஏதாவது கூறி எங்களை மகிழ்வித்த வண்ணம் இருக்கிறான் ரிஷப்.
இதையெல்லாம்
நேரிடையக அவன் சொல்வதைக் கேட்க மிகவும் ரசமாயிருக்கும்.
Friday, 21 October 2011
Friday, 14 October 2011
பற்றி நின்றால் பற்றகற்றும்
ஆக்க ஒரு கடவுள் உண்டு; அதுவே ப்ரும்மா;
அழிக்க ஒரு கடவுள் உண்டு; அதுவே சிவமாகும்;
காக்க ஒரு கடவுள் உண்டு; விஷ்ணு எனும் நாமம்;
கல்வியுமளிக்க கலை தேவியாம் சரஸ்வதி;
செல்வமுமளிக்க செந்தாமரையில் லட்சுமி;
அனைத்தையும் காக்கும் அருள் பொழியும் அம்பிகை;
மழை வேண்டி மாரியம்மன்;
குலம் சிறக்கக் காளியம்மன்;
மனமிரங்க துர்கையம்மன்;
ஆக எதற்குமொரு பற்றுண்டு;
பற்றி நின்றால் வெற்றியுண்டு;
வெற்றி கண்டால் கலக்கமில்லை;
கலங்கி நின்றால் இரக்கமில்லை;
இரங்கி நின்றால் ஏற்றமில்லை;
ஏற்றமிருப்பின் தெளிவு இல்லை;
தெளிவு கண்டால் பற்றில்லை;
பற்று இன்றேல் ஞானமுண்டு;
ஞானம் கண்டால் உயர்வு உண்டு;
இதுவே வாழ்வின் பல நிலைகள்.
அழிக்க ஒரு கடவுள் உண்டு; அதுவே சிவமாகும்;
காக்க ஒரு கடவுள் உண்டு; விஷ்ணு எனும் நாமம்;
கல்வியுமளிக்க கலை தேவியாம் சரஸ்வதி;
செல்வமுமளிக்க செந்தாமரையில் லட்சுமி;
அனைத்தையும் காக்கும் அருள் பொழியும் அம்பிகை;
மழை வேண்டி மாரியம்மன்;
குலம் சிறக்கக் காளியம்மன்;
மனமிரங்க துர்கையம்மன்;
ஆக எதற்குமொரு பற்றுண்டு;
பற்றி நின்றால் வெற்றியுண்டு;
வெற்றி கண்டால் கலக்கமில்லை;
கலங்கி நின்றால் இரக்கமில்லை;
இரங்கி நின்றால் ஏற்றமில்லை;
ஏற்றமிருப்பின் தெளிவு இல்லை;
தெளிவு கண்டால் பற்றில்லை;
பற்று இன்றேல் ஞானமுண்டு;
ஞானம் கண்டால் உயர்வு உண்டு;
இதுவே வாழ்வின் பல நிலைகள்.
Subscribe to:
Posts (Atom)