Monday 15 October 2012

தாயின் மயக்கம்!



கருவினில் வளர்கையில் நான் கண்டேன் பல தொல்லை,
பிறந்தபின் நீ தந்தாய் சிரிப்பெனும் ஓர் முல்லை;
பல மாதம் கழிந்தபின் நீ நகர்ந்தாய் வட்டமிட,
பார்த்து நான் களித்தேன் அது நெஞ்சைத் தொட்டுவிட;
அடுத்து நின்றாய் நடந்தாய் ஓடினாய்,
நானும் ஆடினேன் உன்னுடன் ஓடினேன்;
நாட்கள் நகர பிதற்றினாய்ப் பேச்சென்று,
வியப்பினால் விக்கித்தேன் இதையும் மெச்சவோவென்று;
இருபினும் இருக்கிறது நாள் முழுதும் உன் வேலை,
ஆயினும் இழுக்கிறது குறும்பெனும் உன் லீலை;
நீயும் வளர்ந்தாய் எண்ணிலா சிறப்புடன்,
நானும் நினைத்தேன் சற்றே மயக்கமுடன்;
நானென்று காண்பேன் நீ வளர்ந்த படிகளை,
இன்னொன்று ஈன்றால் தந்திடுமோ செல்ல அடிகளை;
நினைவு கூர்ந்தேன் நான் கண்ட பல தொல்லை,
இல்லை வென்றிடுமோ சிரிப்பெனும் முல்லை!

உலகில் மக்கட் தொகை பெருக இதுதானோ காரணம்?

Monday 26 March 2012

Hello friends

 This is the  recipe which got me the third prize.  I didn't expect a electric stove  . It made the cooking abit harder  . I had to hurry at the end.






Eggplant Rice
Ingredients:
Eggplants........2 to 3 long ones
Onions.............1 medium sized
Tomato.............1 small
Salt....................one and a half teaspoons
Oil.....................6 teaspoons
Ghee.................4 teaspoons
Rice...................1 cup
Water.................two and a half cups
Mustard seeds...1/4 teaspoon
Channa dhal......1 teaspoon
Masala:
Urid dhal....................1 teaspoon
Chnna dhal..................1 teaspoon
Dry Chillies.................3
Desiccated coconut......4 teaspoons (shredded)
Coriander seeds............1 teaspoon
Spices:
Cardamom...........4 or 5 seeds
Cinnamon............1/2 an inch
Cloves..................2
Preparation
Wash the eggplants and cut them into long, thin strips. Cut the onions in the same way and keep aside. Boil some water in a saucepan and put the tomato in it for 3 minutes. Remove skin and dice the tomato.
Next wash the rice and cook it in two and a half cups of water until soft and keep aside. After five minutes, fluff the rice with a fork.
Sprinkle some hot water on the desiccated coconut and leave for five minutes.In a pan heat a teaspoon of oil and fry the masala ingredients except for desiccated coconut to golden brown.  Then add the coconut and remove from the heat. Grind it to a powder.
Grind the remaining spices in a pestle and mortar.
In a non-stick wok, heat the oil and ghee and add mustard seeds. When it splatters add the channa dhal. When the dhal becomes golden brown, add the onions and cook until soft. To this add the eggplant strips and cook for one minute and then throw in the diced tomato. When all of them are cooked but still firm, add the masala powder and half a teaspoon of salt. Mix thoroughly. Now it’s the time to add the rice, along with the spice powder. Season it with salt and mix well.  Now the eggplant rice is ready. It can be served with papad.
Approximately it can be served  for eight people.

........................ .........................

Tuesday 17 January 2012

நம் நாடும் சுத்தமும்


‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’
‘சுத்தமே சோறு போடும்’ என்றெல்லாம் பழமொழி உண்டு. ஆனால் நாம் எந்த அளவிற்க்கு அதை செயலாற்றுகிறோம்? வீட்டில் இருக்கும் குப்பையைத் தெருவில் கொட்டுகிறோம் தெருக்களில் வீடில்லாத சிறுஇடம் கிடைத்தாலும் அங்கு குப்பை சிறு மலையாகக் காட்சியளிக்கிறது. சர்க்கார், வீடுகளில் எடுக்கும் குப்பையைக் கொண்டு போய் வீடுகளுக்கு அருகில் பெரிய காலியான இடங்களில் சேர்க்கிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் சொல்லி முடியாது.

சர்க்கார் இதற்காக் ஒருமுயற்சியும் செய்வதில்லை. ஆனால் மக்கள் ஏன் முயற்சி எடுக்கக் கூடாது?
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்” அல்லவா?
சர்க்கார் நமக்கு நன்மை செய்யாமல் இருந்தாலும் மக்கள் இப்பணிகளைத் தாங்களே செய்து அதற்குப் படிப்பினைக் காட்டவேண்டாமா? நாம் நம் வீடுவரையில் , தெருவரையில் சுத்தமாக வைத்துக்கொள்ள முயற்சிக்கலாமே. பலகோடி லாபங்களை அடையும் நிறுவனங்கள் சிறுவர், சிறுமியர், மற்றும் பெரியவர்க்கும் க்ளொவ்ஸ், பூட்ஸ், உடுப்பு, கறுப்புக் கண்ணாடி, மாஸ்க் போன்றவற்றை இலவசமாக வாங்கிக் கொடுத்து மாதமொருமுறை எல்லோரையும் க்ளீனிங்க் காம்பெய்னில் ஈடுபடுத்தலாமே? தெரு மற்றும் பொது இடங்கள், கடற்கரை என்று எல்லா இடங்களும் விரைவில் சுத்தமாகும்.
http://www.bbc.co.uk/news/world-asia-15769402 இந்த லிங்கில் உள்ள “அக்லி இந்தியன்ஸ்” எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று.

“கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” ஐயமில்லை. நம் நாட்டவர் மேலை நாடுகளில் வேலைவாய்ப்பு அதிகம் பெறுகின்றனர். ஆனால் எந்த அளவிற்கு மேலை நாட்டினர் நம்மை மதிக்கின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை மதிக்கப் படிப்பு மட்டும் போதாது . சுத்தமும் வேண்டும். மேலை நாடுகளில் இருக்கும் நாமே அவர்களுக்கு இணையாக சுத்தமாக இருக்கிறோமா என்று சொல்லமுடியாது. இதைப் பற்றிக் கூறுகையில் கழிவறையைப் பற்றிக் கூறியே ஆக வேண்டும்.


நம் நாட்டில் பொது இடங்களில் கழிவறை வசதிகள் மிகக் குறைவு. இருக்கும் கழிவறைகளும் அசுத்தத்திற்குப் பெயர் போனவை. ஏன் அவ்வளவு தண்ணீர்? புரியவில்லை. நீரினால் நம்மை சுத்தப் படுத்தும் அதே நேரம் கிருமிகளைப் பரப்பவும் , கொசுக்களை உற்பத்தி செய்யவும் அதே தண்ணீர் உதவுகிறது என்று தெரியாதா? இதனால் பரவும் வியாதிகள் பலப் பல. ஒருமுறை காசுகொடுத்து செல்லும் கழிவறை ஒன்றிற்குச் சென்றேன். கால் பதிக்க முடியவில்லை. ஏன் இந்த நிலை என்று பணியாளரைக் கேட்ட பொழுது அவரின் பதில் என்னைக் குன்ற வைத்தது. ஆக சுத்தமாக வைக்க வேண்டும் என்பது ஒருவர் மனதிலும் இல்லை. தொலைக்காட்சிகளில் எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் போட்டுக் காட்டவேண்டும், எல்லோரும் நலமுடன் வாழ மக்கள் இவைகளை அறிந்திருப்பது மிக அவசியம்.

மேலும் பொதுக் கழிவறைகளிலும் , வீடுகளிலும் , இரயில்களிலும் டாய்லெட் சீட்டின் மீது தண்ணீர் தேங்கியிருக்கும் நிலையில் எங்ஙனம் அமருவது? இதற்குக் காரணம் ஒன்று நம்மை சுத்தி செய்ய பயன் படும் தண்ணீர்க் குழாய் சரியான வால்வுடன் இருக்காது. இரண்டு வீடுகளில் டாய்லெட் அருகில் இருக்கும் ஷவருக்கு தடுப்புச் சுவர் கிடையாது. நான் பேசுவது வெஸ்டர்ன் டாய்லெட் பற்றியாகும். இப்போது அனைவரின் செல்வநிலை சற்றே உயர்ந்திருக்கையில் இதையெல்லாம் கவனிக்கலாமே.
டாய்லெட் சீட்டுகள் தரமானதாக இருப்பதில்லை. தண்ணீர் குழாய்கள் துருப்பிடித்திருக்கும். டாய்லெட் பவுல் கறை பிடித்து இருக்கும்.. டாய்லெட் பவுலிற்கு வரும் தண்ணீர் உப்பு நீராக இருக்கையில் கறை நீங்குவது கடினம். அதற்கு உபயோகிக்க திறமான சுத்திகரிப்புகளைக் கண்டு பிடிக்கலாமே? இதையெல்லாம் செய்தால் நம் நாட்டில் டூரிஸம் கூட அதிகரிக்கும் என்பேன் நான்.

இதையெல்லாம் கவனித்தால் இந்தியவைப் பற்றி இன்னும் பெருமையடையலாம்

Friday 21 October 2011

மழலை இன்பம்.

குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.


குழந்தைகள் தம் மழலை சொல்லால் நம்மை ம்கிழ்விக்கும் பொழுது அதற்கு நிகரான இன்பம் வேறில்லை எனலாம்.

என்னுடைய பேரன் இதற்கு விதி விலக்கல்ல. இரண்டு வயதிலேயே நன்கு பேசத்துவங்கிவிட்டான். பிற்காலத்தில் சிறந்த
பேச்சாளராக வருவனோ அல்லது பேசி மற்றவர்களைத் தூக்கத்தில் ஆழ்த்துவானோ தெரியாது. இப்போது எல்லோரையும்
மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறான்.

இதோ சில கிள்ளை மொழி.

புத்தகங்களைப் பெரிய மனிதன் போல் வாசித்துக் கொண்டிருந்தவன் திடீரென்று , "அம்மா நீ (நான்) யொம்ப சந்தோஷமாயிக்கேன்"
என்பான்.

ஒரு நாள் சமயலறையில் தொடவேண்டாம் என்ற சாமானத்தை தொட்டுவிட்டு எல்லோரும் ஏகக்குரலில் எடுக்க வேண்டாம் என்று
கத்திய பொழுது சிரித்துக் கொண்டே " நீ யொம்ப குறும்பு பண்றேன்" என்று கூறினான்.

காரில் எல்லோரும் சென்று கொண்டிருந்தோம். அப்போது நடந்த உரையாடல்.

" 'தாத்தா கார் எங்கே?'
'தாத்தா கார் ஆக்சிடெண்ட் ஆயிடுத்து'
'எப்டி தாத்தா கார் அக்சிடெண்ட் ஆயிடுத்து?'
'டாக்சி ஃபாஸ்டா வந்து இடிச்சுட்டான்'

அடுத்து அவன் கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

'ஃபாஸ்டா போனா போலீஸ்காரன் புடிசிண்டு போயிடுவான்'


ரதி, ராஜேஷ், ரிஷப் மூவரும் வெளியில் செல்லக் கிளம்பினார்கள். திடீரென்று ரிஷப் உள்ளே ஓடி வந்து விட்டான்.
ரதி உள்ளே திரும்பி வந்து அவனை ஏன் உள்ளே வந்தாய் என்று கேட்க அவனோ 'அதான் ஒரு சிரிப்பு ' என்று கூறி எல்லோரையும்
சிரிக்க வைத்தான்.


தாத்தாவுக்கும் பேரனுக்கும் ஒரு விளையாட்டு.
தாத்தா:
க்ரீன் லைட் வந்தா..
பேரன்: போகணும்
தாத்தா: ரெட் லைட் வந்தா..

பேரன்: ஸ்டாப்
மறுபடிதாத்தா:
க்ரீன் லைட் வந்தா..
பேரன் குறும்பு சிரிப்புடன்: ஸ்டாப்
தாத்தா: ரெட் லைட் வந்தா..
பேரன்: போகணும்
திரும்ப அதே கேள்வி , அதே பதில்
பின்னர் தாத்தா: க்ரீன் வந்தா ஸ்டாப், ரெட் வந்தா கோ
பேரன்: க்ரீன் வ்ந்தா கோ , ரெட் வந்தா ஸ்டாப்.


ஜோ என்பவர் என் வீட்டுக் க்ளீனர்.

ரதி "வரியா ரிஷப் ஜோ குளிக்கலாம் " என்றால் 'ஜோ எங்கம்மா?' என்று பேரன் கேட்பான்.

இப்படியாகத் தினமும் ஏதாவது கூறி எங்களை மகிழ்வித்த வண்ணம் இருக்கிறான் ரிஷப்.
இதையெல்லாம் நேரிடையக அவன் சொல்வதைக் கேட்க மிகவும் ரசமாயிருக்கும்.

Friday 14 October 2011

பற்றி நின்றால் பற்றகற்றும்

ஆக்க ஒரு கடவுள் உண்டு; அதுவே ப்ரும்மா;
அழிக்க ஒரு கடவுள் உண்டு; அதுவே சிவமாகும்;
காக்க ஒரு கடவுள் உண்டு; விஷ்ணு எனும் நாமம்;
கல்வியுமளிக்க கலை தேவியாம் சரஸ்வதி;
செல்வமுமளிக்க செந்தாமரையில் லட்சுமி;
அனைத்தையும் காக்கும் அருள் பொழியும் அம்பிகை;
மழை வேண்டி மாரியம்மன்;
குலம் சிறக்கக் காளியம்மன்;
மனமிரங்க துர்கையம்மன்;
ஆக எதற்குமொரு பற்றுண்டு;
பற்றி நின்றால் வெற்றியுண்டு;
வெற்றி கண்டால் கலக்கமில்லை;
கலங்கி நின்றால் இரக்கமில்லை;
இரங்கி நின்றால் ஏற்றமில்லை;
ஏற்றமிருப்பின் தெளிவு இல்லை;
தெளிவு கண்டால் பற்றில்லை;
பற்று இன்றேல் ஞானமுண்டு;
ஞானம் கண்டால் உயர்வு உண்டு;
இதுவே வாழ்வின் பல நிலைகள்.

Sunday 28 August 2011

மதம்

எம்மதமும் சம்மதம் என்று
செப்பினான் அன்றோர் புலவன்;
ஆயின் இன்று கண்டதோ
மதத்தால் பிரிவினை
எனும் பெரும்பிளவு;
கடவுளின் சன்னிதானத்தில்
எல்லோரும் சமம் என்று
இயம்பினார் ஒரு பிரிவினர்;
ஆயின் இவ்வுலகு கண்டதோ
 ஹிம்சை எனும் அரக்கன்;
புலியும் பூனையும் ஒருங்கிணைந்து
எடுக்கிறோம் புகைப்படம்;
அவர்க்கிருக்கும் அறிவினைக்
கொடுப்பாயா எமக்கும்
எந்தன் இறைவனே!

Thursday 7 April 2011

மடல் பதின்மூன்று

என் எண்ணமெல்லாம் வடித்தெடுத்து
கவிதையாக மாலை சூட்டி
கடற்கரையில் சிலைவடித்து  
கற்பனையில் கரமிணைத்து
காலமெலாம் நண்பர்களாய்
கனவினிலே கலை படித்து
கருத்தொருமித்த வேளையில்தான்  நீயொரு
பல்கலைக் கழகமென்றுணர்த்தியதால்
கண்ணிரண்டும் நீர் நிறைந்து
இதயத்தில் மெருகூட்டியதே!

-ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் அவசியம்